சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக வரும் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என முதல்வர் ஜெவிற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் முதல்வர் ஜெ. இதனையடுத்து அவர் நீக்கதை ரத்து செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். மேலும் ஜெ வழக்கை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நநீதிபதியுடன் அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி முடிகவுடா நியமிக்கப்பட்டார்.  இன்று வழக்கை விசாரித்த அவர் வரும் 30ம் தேதி ஜெ நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலா. இளவராசி, சுதாகரனும் அன்றைய தேதியில் ஆஜராக வேண்டும் என அவர் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply