சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதா: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் இயற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீட் விலக்கு மசோதா குறித்து அடுத்த கட்ட ஆலோசனை நடத்துவதற்காக இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடிய நிலையில் இந்த கூட்டத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றசிறப்பு சட்டமன்றக் கூட்டம் கூடும் என்றும், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்த தேதியை விரைவில் சபாநாயகர் அறிவிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.