மீண்டும் மாறுகிறதா சட்டப்பேரவை நடைபெறும் இடம்?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும், அதற்கான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் காகிதமில்லா வகையில் கணினிகள் பொருத்தும் பணியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கொரோனா சூழலை பொறுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.