ஜனவரி 5 முதல் சட்டமன்ற கூட்டத்தொடர்: எங்கு நடைபெறுகிறது தெரியுமா?

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் கலைவாணர் அரங்கில் தான் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற கூட்டத்தொடரை நடைபெறவுள்ளது.

ஜனவரி 5ஆம் தேதி முதல் கவர்னர் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும், இந்த பணிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பார்வை என்பது குறிப்பிடத்தக்கது.