கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவர் காங்கிரஸ் பெண் தொண்டர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு இளம்பெண், ராகுல்காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை வீடியொ எடுத்துக்கொண்டிருந்த ஒருவர் யூடியூபில் பதிவு செய்தார். இணையத்தில் வெளியானதால் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான பொதுமக்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை முத்தம் கொடுத்த அந்த பெண், அவரது வீட்டில் மர்மமான முறையில் தீயில் கருகி மரணம் அடைந்தார். அவரது கணவரும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்ததால், அந்த பெண்ணின் கணவரை பலர் கிண்டல் செய்ததாகவும், இதன் காரணமாக அந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் சர்சை எழுந்ததாகவும், கூறப்படுகிறது.

முத்தம் கொடுத்த அந்த பெண்ணின் பெயர் போண்டி என விசாரணையில் தெரிய வந்துள்ளது. போண்டியை அவரது கணவரே தீயிட்டு கொலை செய்தாரா? அல்லது வேறு யாரேனும் இருவரையும் தீயிட்டு கொளுத்தினார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1ctgQeD” standard=”//www.youtube.com/v/RR3hlaZn58Y?fs=1″ vars=”ytid=RR3hlaZn58Y&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep4410″ /]

Leave a Reply