shadow

ஆசியாவின் மிகப்பெரிய கோபுரம் சாம்பலானது: சீன மக்கள் அதிர்ச்சி

ஆசியாவின் மிகப்பெரிய மர கோபுரம் என்ற புகழை பெற்றிருந்த கோபுரம் தீவிபத்தில் சாம்பலானதால் சீன மக்கள் சோகத்தில் உள்ளது. மரத்தால் அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட இந்த 16 அடுக்கு மர மாளிகை கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த நிலநடுக்கத்தால் பழுதடைந்தது.

ஆனால் இந்த கோபுரம் பலகோடி ரூபாய் மதிப்பில் சரிசெய்யப்பட்டு மீண்டும் கம்பீரமாக காட்சி அளித்தது. இந்த நிலையில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ விபத்திற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த கோபுரம் கொழுந்துவிட்டு எரியும்போது பலர் சோகத்துடன் அதனை வீடியோ எடுத்தனர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply