ஆஷஷ் தொடர்: ஒரு போட்டியை கூட வெல்லாத இங்கிலாந்தின் பரிதாபம்!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதை அடுத்து இங்கிலாந்து ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை.

ஆஷஷ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 303 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 155 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்சில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால் அந்த அணி 224 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஆஷஷ் தொடரில் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.