ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் அசராம் பாபு, உ.பி. மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சகோதரிகள் இரண்டு பேர், அசராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் இருவரும், தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சூரத் போலீசில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

இதுதொடர்பாக, சூரத் போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தனா கூறுகையில், ‘‘பாலியல் பலாத்கார புகார் தொடர்பாக, நாராயண் சாயை விசாரணைக்கு அழைக்க திட்டமிட்டிருந்தோம். இதையறிந்த அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக, நாராயண் சாய்க்கு போலீசார் நோட்டீசும் வழங்கியிருக்கின்றனர். இதுதொடர்பாக, குடியுரிமை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Leave a Reply