shadow

அஜித் இயக்குனரின் அடுத்த படத்தில் ஆர்யா

aryaஅஜீத் நடித்த முகவரி, சிம்பு நடித்த தொட்டி ஜெயா உள்பட ஒருசில படங்களை இயக்கிய இயக்குனர் துரை நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஆர்யா மற்றும் அமீர் ஆகிய இரண்டு ஹீரோக்கள் நடிக்கவுள்ளனர்.

ஆர்யா சமீபத்தில் நடித்த ஒருசில படங்கள் இரண்டு கதாநாயகர்கள் படங்களாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து படங்களும் தோல்வி அடைந்த நிலையில் இனிமேல் அவர் இரண்டு கதாநாயகர்கள் படங்களில் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பை மீறி அவர் மீண்டும் இரண்டு கதாநாயகர்கள் படத்தில் நடிக்கவுள்ளார்.

ஆர்யா, அமீர் இணையும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ‘வந்தா மல’ என்ற படத்திற்கு இசையமைத்த சாம் டி.ராஜ் என்பவர் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply