‘அருவா’: சூர்யாவுக்கு 6, ஹரிக்கு 16. இமானுக்கு 1

‘அறுவா’: சூர்யாவுக்கு 6, ஹரிக்கு 16. இமானுக்கு 1

சூர்யா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பில் இந்த படத்தின் டைட்டில் ‘அருவா’ என்று வெளியாகியுள்ளது. ஹரியுடன் சூர்யா இணையும் 6வது படம். இதற்கு முன்னர் ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ளார்.

அதேபோல் ஹரி இயக்கும் 16வது படம் இதுதான். சூர்யா மற்றும் ஹரி படத்தில் டி.இமான் பணிபுரிவது இதுதான் முதல் முறை. மேலும் இந்த படம் தீபாவளி ரிலீஸ் என்பதால் அஜித்தின் ‘வலிமை’யுடன் மோதும் வாய்ப்பும் உள்ளது.

இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா தயாரிக்கின்றார். இவர் ஏற்கனவே சூர்யா நடித்த ஐந்து படங்களை தயாரித்துள்ளதால் இவர் தயாரிக்கும் 6வது சூர்யா படம் இதுதான்.

Leave a Reply