shadow

விவசாய கடன் தள்ளுபடியை மத்திய அரசு ஏற்குமா? அருண்ஜெட்லி விளக்கம்

பருவமழை பொய்த்தது உள்பட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் உள்பட அனைத்து மாநில விவசாயிகளும் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

ஆனால் அதே நேரத்தில் இந்த கடன் தள்ளுபடியால் மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையை மத்திய அரசு ஏற்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண்ஜெட்லி,
‘‘விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதால் ஏற்படும் சுமையை அந்தந்த மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ள வேண்டும். மத்திய அரசு அதில் தலையிடாது. இதுவரை கடன் தள்ளுபடி அறிவித்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எந்தவொரு நிதி உதவியும் செய்யவில்லை’ எனக் கூறினார்.

எனவே விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டால் அது மாநில அரசின் பொறுப்பாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply