ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திடீர் நிறுத்தம்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திடீர் நிறுத்தம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்கள் எழுந்ததால் இதுகுறித்து விசாரணை செய்ய ஆணையம் ஒன்றை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு நியமனம் செய்தது

நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான இந்த ஆணையம் கடந்த சில மாதங்களாக ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வந்தது.

இந்த நிலையில் நீதிபதி ஆறுமுகச்சாமி அவர்களின் ஆணையத்தில் ஆஜரானவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்ய வசதியாக இன்று முதல் 15 நாள்கள் விசாரணை நிறுத்திவைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.