தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி கவுன்சிலர்கள் 17 பேருக்கு தனது சொந்த செலவில் ஸ்கூட்டர் மற்றும் மாதம் 10 லிட்டர் பெட்ரோல் வழங்குவதாக பேரூராட்சி தலைவர் அறிவித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவராக திமுகவின் கல்யாணசுந்தரம் வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே
இந்நிலையில் இந்த தொகுதியில் உள்ள அதிமுக கவுன்சிலர் ஒருவரை தவிர மற்ற 17 கவுன்சிலர்களுக்கு ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்பட்டது
அதுமட்டுமின்றி அந்த வாகனத்தை பயன்படுத்த மாதம் 10 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என பேரூராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்