தேர்வு அறையில் பேசினால் ஆப்பு வைக்கும் சாப்ட்வேர்: மாணவர்கள் அதிர்ச்சி

தேர்வு அறையில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் பேசினாலோ அல்லது தேர்வு கண்காணிப்பாளர் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வகையில் ஈடுபட்டாலோ உடனடியாக அங்கிருக்கும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்ற சாஃப்ட்வேர் தேர்வு கண்காணிப்பாளருக்கு தகவல் அனுப்பி விடும் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தேர்வுகளில் மாணவர்கள் முறையீடு செய்வது அதிகரித்து வரும் நிலையில் சிசிடிவி கேமரா மற்றும் பறக்கும் படை உள்பட பல்வேறு முறைகள் மூலம் முறைகேடுகள் தடுக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் நவீன டெக்னாலஜி மூலம் முறைகேடுகளை தடுக்க டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது

இதன்படி வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் முதுநிலை பட்டதாரிகள் தேர்வில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்ற சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்ட உள்ளதாகவும் இந்த சாப்ட்வேர் மூலம் தேர்வில் முறைகேடு செய்பவர்கள் எளிதில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறியுள்ளார்

Leave a Reply