’தர்பார்’ படத்தின் ரகசியம்: ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற போது இந்த படத்தில் ரஜினிகாந்தின் கேரக்டரான ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரில் ஒளிந்திருக்கும் ரகசியத்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தனது உரையில் தெரிவித்தார்

ஒவ்வொரு மனிதனுக்கும் தந்தையும் மகனும் மிகவும் முக்கியமான உறவுகள் என்றும் உலகிலேயே தங்களுக்கு பிடித்த இரண்டு ஆண்கள் யார்? என்ற கேள்வியை யாரை கேட்டாலும் ஒருவர் தந்தை என்றும் இன்னொருவர் மகன் என்றும் தான் பதில் கூறுவார்கள் என்றும் ஏஆர் முருகதாஸ் கூறினார்

அந்த வகையில் எனது தந்தையின் பெயர் அருணாச்சலம் மற்றும் எனது மகனின் பெயர் ஆதித்யா ஆகிய இரண்டு பெயர்களையும் இணைத்து ’ஆதித்யா அருணாச்சலம்’ என்ற கேரக்டரை ரஜினி சார் அவர்களிடன் கேரக்டராக உருவாக்கினேன் என்று அவர் கூறினார்

மேலும் தல, தளபதி, தலைவர் ஆகிய மூன்று பேர்களையும் தான் இயக்கியிருந்தாலும் தலைவர் வேற லெவல் என்றும் அவரை யாரோடும் ஒப்பிட முடியாது என்றும் தெரிவித்தார்

Leave a Reply