shadow

rihaannaaஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா கோப்பையை வென்றால் தனது கணவரை பிரபல நடிகையிடம் ஒரு வாரத்திற்கு வாடகைக்கு விட தான் போட்டி வைத்ததாகவும், நல்ல வேளையாக அர்ஜெண்டினா தோல்வி அடைந்ததால் தன் கணவரை காப்பாற்றிவிட்டதாகவும் அர்ஜெண்டினா அணியின் கோல்கீப்பரின் மனைவி தெரிவித்தார்.

பிரபல நடிகையும் பாடகியுமான ரிஹானாவின் தீவிர ரசிகரான அர்ஜெண்டினா கோல் கீப்பர் செர்ஜியோ ரொமிரோவுக்கும் அவருடைய மனைவிக்கும் ஒரு இறுதிப்போட்டிக்கு முந்திய நாள் ஒரு போட்டி ஏற்பட்டுள்ளது. அர்ஜெண்டினா கோப்பையை வென்றால், தான் தனக்கு பிடித்த நடிகை ரிஹானாவுடன் ஒருவாரம் தங்கியிருக்க அவரது மனைவி அனுமதிக்க வேண்டும் என்பதுதான் இந்த போட்டி. இந்த போட்டிக்கு செர்ஜியோவின் மனைவியும் ஒப்புக்கொண்டார்.

ஆனால் இறுதிப்போட்டியில் ஜெர்மனியுடன் அர்ஜெண்டினா தோல்வியுற்றதால் கோல்கீப்பர் செர்ஜியோவின் கனவு பலிக்கவில்லை. இதுகுறித்து பேட்டியளித்த செர்ஜியோ மனைவி, அர்ஜெண்டினா தோல்வி அடைந்தது ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் கணவருடன் வைத்த போட்டியில் வெற்றி பெற்று கணவரை காப்பாற்றிவிட்டதாக கூறினார். ஏற்கனவே நடிகை ரிஹானா, தனக்கு செர்ஜியோ மீது தீராத காதல் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply