shadow

உலக கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சூப்பர் வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் அர்ஜென்டினா அணியின் சூப்பர் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நள்ளிரவு நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதிய நிலையில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டு இருந்தன

இந்த நிலையில் பெனால்டி சூட் முறையில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனால் பிரான்ஸ் அணி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது