பிரேசில் நாட்டில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஈரான் அணியை அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கோல்கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அர்ஜெண்டினா அணிக்கு அடுத்த சுற்றுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் ஈரான், அர்ஜெண்டினா ஆகிய இரு அணி வீரர்களும் சமபலத்தில் ஆக்ரோஷமாக மோதியதால் இரு அணி வீரர்களாலும் கோல் எதுவும் போட முடியவில்லை. இரு அணியின் கோல்கீப்பர்கள் மிக அபாரமாக பந்துகளை தடுத்து விளையாடியதால் ஆட்டநேர முடிவு வரை இரு அணிகளும் கோல் எதுவும் போடாமல் ஆட்டம் டிராவில் முடியும் நில இருந்தது.
அதன்பின்னர் கூடுதல் நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸி மிக தொலைவில் இருந்து அடித்த பந்து மிகச்சரியாக கோலாக மாறியதால் அர்ஜெண்டினா கடைசி சில நொடிகள் இருக்கும் நிலையில் அர்ஜெண்டினா த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அர்ஜெண்டினா ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.