எத்தனை மனைவிகள், கன்னித்தன்மை உள்ளதா? வில்லங்க கேள்விகள் கேட்ட மருத்துவ கல்லூரி

எத்தனை மனைவிகள், கன்னித்தன்மை உள்ளதா? வில்லங்க கேள்விகள் கேட்ட மருத்துவ கல்லூரி

ஒரு விண்ணப்ப படிவத்தில் திருமணம் ஆனவரா, ஆகாதவரா என்று மட்டுமே கேட்கப்படும். ஆனால் பீகார் மாநில இந்திரா காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் விண்ணப்பத்தில் நீங்கள் கல்யாணம் ஆகாதவரா, உங்களுக்குப் பல மனைவிகள் உண்டா? போன்ற வில்லங்கமான கேள்விகளைக் கேட்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது

மேலும் இந்த விண்ணப்ப படிவத்தில் ஆண் ஊழியர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால், அந்த விவரங்களை வழங்குமாறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

அதுமட்டுமின்றி பெண் ஊழியர்களின் கன்னித்தன்மை குறித்த கேள்விகளும் கேட்கப்பட்டிருந்ததால் விண்ணப்பம் செய்ய வந்த பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது மட்டுமன்றி ,பெண் ஊழியர்களாக இருந்தால், அவர்களுடைய கணவருக்கு ஏற்கெனவே மனைவி இருக்கிறதா, அவருடைய மனைவி உயிருடன் இருக்கிறாரா எனப் பல வில்லங்கமான கேள்விகள் கேட்கப்பட்டு சர்ச்சையை எழுப்பியுள்ளது.

Leave a Reply