shadow

இயக்குனர் ஆகிறார் அரவிந்தசாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தளபதி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அரவிந்தசாமி அதன் பின்னர் ‘ரோஜா’, ‘பம்பாய்’, இந்திரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

சமீபத்தில் அரவிந்தசாமி நடித்த ‘தனி ஒருவன்’ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது அவர் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அரவிந்தசாமி அறிவித்துள்ளார். இந்த படத்தில் தானே ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகராக வெற்றி பெற்றுள்ள பலர் இயக்குனராகவும் ஜொலித்துள்ள கோலிவுட்டில் இன்னொரு நடிகர் இயக்குனர் ஆகவுள்ளார். அவருக்கு நமது வாழ்த்துக்கள்

Leave a Reply