shadow

ajith and aravindasamyஅஜீத்தின் 55வது படமான கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அஜீத் வில்லன்களாக நடிக்க இரண்டு முக்கிய நடிகர்கள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். அவர்கள் அருண் விஜய் மற்றும் அரவிந்தசாமி.

அருண்விஜய் ஏற்கனவே சூர்யா நடிப்பதாக இருந்த துருவ நட்சத்திரம் படத்திற்காக கால்ஷீட் கொடுத்திருந்தார். அந்த படம் டிராப் ஆனதால், அந்த கால்ஷீட்டை அஜீத் படத்தில் பயன்படுத்த கவுதம் மேனன் முடிவு செய்துள்ளார். மேலும் இந்த படத்தின் முக்கிய வில்லனாக நடிக்க அரவிந்தசாமி ஒப்பந்தம் ஆகியுள்ளார். அரவிந்தசாமி வில்லனாக நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா, தெலுங்கில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதிலும், கவுதம் மேனனுக்கு தேதிகளை கொடுத்து, அவர் இந்த படத்தில் நடிப்பதை உறுதிசெய்துள்ளார்.

மே மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கவுதம் மேனன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Leave a Reply