திமுகவில் அரசகுமார்! மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.
தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் அரசகுமார் என்பவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவையும் முக ஸ்டாலினையும் பெருமளவு புகழ்ந்தார். தமிழகத்தின் முதல்வர் பதவிக்கு முகஸ்டாலின் மட்டுமே தகுதியானவர் என்றும் அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
அமித்ஷா முதல் அடிமட்ட பாஜக தொண்டர் வரை திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஒரு மாநிலத்தின் துணை தலைவரே திமுகவுக்கு ஆதரவாகவும் முதல்வர் பதவிக்கு முக ஸ்டாலின் தான் பொருத்தமானவர் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் கட்சி ரீதியில் அரசகுமார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதனை அடுத்து திடீர் திருப்பமாக இன்று காலை அரசகுமார் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் முக ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டு திமுகவின் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி, தங்கத்தமிழ்செல்வன் உள்பட பலர் திமுகவில் இணைந்து உள்ள நிலையில் தற்போது பாஜகவிலிருந்து திமுகவுக்கு தலைவர்கள் வந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.