’அரண்மனை 3’ அப்டேட் கொடுத்த உதயநிதி, குஷ்பு!

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்த ’அரண்மனை 3’ திரைப்படம் வரும் அக்டோபர் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை உதயநிதி அறிவித்துள்ளார்.

’அரண்மனை 3’ திரைப்படத்தின் டிரைலர் வரும் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதியை போல் குஷ்புவும் டிரைலர் அப்டேட்டை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஆர்யா, சுந்தர் சி, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, கோவை சரளா, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். சி சத்யா இசையில், செந்தில்குமார் ஒளிப்பதிவில் ,உருவாகியுள்ளது.,