“ரவ்னக்” என்ற மியூசிக் ஆல்பத்தின் வெளியீட்டு விழா சமிபத்தில் மும்பையில் நடந்தது. இந்த ஆல்பத்திற்கு மத்திய அமைச்சர் கபில்சிபல் பாடல்கள் எழுதியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து இருந்தார். இந்த ஆல்பம் வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடந்தது.

இந்த விழாவில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சல்மான்கான், பாடல்கள் எழுதிய கபில்சிபலை மிகவும் புகழ்ந்து பேசினார். பின்னர் இசை பற்றி அவர் பேசும்போது, ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கார் விருதை பெற்றிருந்தாலும், இந்த ஆல்பத்தில் சாதாரண இசையை மட்டுமே கொடுத்துள்ளார் என்று பேசியுள்ளார்.

இவரது பேச்சை கேட்டு விழாவுக்கு வந்தவர்கள் பரபரப்பு அடைந்தார்கள். ஆஸ்கார் விருது பெற்ற ஒரு இசையமைப்பாளரை நாகரீகம் இன்று சல்மான் விமர்சிப்பதாக பலர் வெளிப்படையாக மேடையில் பேசியதால் டென்ஷன் மேலும் அதிகரித்தது. இதனால் சல்மான்கான் பாதியில் எழுந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் கபில்சிபலும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுநாள் டுவிட்டரில் இதற்கு விளக்கமளித்த சல்மான்கான் எல்லோரும் நினைப்பதுபோல் ரஹ்மானை அவமானப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் நான் அப்படி கூறவில்லை. இது ர்ஹ்மானுக்கு நன்கு தெரியும் என்று கூறினார்.

Leave a Reply