ஒரே ஒரு வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்: டிரெண்டுக்கு வந்த தர்பார்

ஒரே ஒரு வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்: டிரெண்டுக்கு வந்த தர்பார்

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் பாடல்களும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும் தெரிந்தது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தின் பின்னணி இசை பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இது குறித்த வீடியோ ஒன்றை சற்று முன்னரே இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்

அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசையும் ஒரு சில நொடிகள் இந்த வீடியோவில் உள்ளது இதனை அடுத்து இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பயங்கரமான வைரல் ஆகியுள்ளது. முருகதாஸ் வெளியிட்ட ஒரே ஒரு வீடியோ இந்த அளவுக்கு வைரலானது ரஜினியின் படம் என்பதாலே என்று அவரது ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.