shadow

காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அதிகாரியாக விஜயகுமார் நியமனம்

ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னரின் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும் சந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்று பிடித்தவருமான விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விஜயகுமாரும், ஜம்முகாஷ்மீர் தலைமை செயலாளரும் கவர்னரின் ஆலோசகர்களாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், நேற்று பகிரங்கமாக வெடித்தது. மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்தது.

இதையடுத்து அம்மாநில கவர்னரின் பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இன்று முதல் ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் ஜம்முகாஷ்மீர் மாநில ஆலோசர்களாக விஜயகுமார் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply