குஜராத் கலவரத்திற்காக மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி தலைஅர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் பெரும் அலை இருப்பதால் அவர் பிரதமராக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் அவருக்கு இருக்கும் ஒரே மைனஸ் குஜராத் கலவரத்தில் அவருடைய நிலைப்பாடுதான். இஸ்லாமிய இன மக்கள் இன்னும் அவர் மீது ஒருவித அச்ச உணர்வையை வெளிப்படுத்தி வருவதால், இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை பெற குஜராத் கலவரம் தொடர்பாக நடந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு அக்கட்சி மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

‘மோடியின் 272 + : முஸ்லிம்களின் பங்கு’  என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரமாண்டமான மாநாட்டில் பேசிய பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்,  ” நாங்கள் எப்பொழுதாவது ஏதாவது தவறு செய்திருந்தால், அதற்காக நிச்சயம் நாங்கள் தலைகுனிந்து மன்னிப்புக் கேட்போம்” என்று குஜராத் கலவரத்தை பற்றி குறிப்பிட்டு பேசினார்.

ஆனால் மோடி இதுகுறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply