shadow

பச்சோந்தி கணேஷ், புளூகுமூட்டை சினேகன்: பிக்பாஸ் பங்கேற்பாளர்களுக்கு பட்டப்பெயர் வைத்த அனுயா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருந்த போதிலும் இன்றைய தமிழகத்தின் ஹாட் டாக்குகளில் இந்த நிகழ்ச்சியும் ஒன்றாக இருப்பதை மறுக்க முடியாது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து நேற்று நடிகை அனுயா வெளியேற்றப்பட்டார். அனுயா, ஜூலி இருவரில் ஒருவர் வெளியேற வேண்டும் என்ற நிலையில் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் வாக்குகள் அடிப்படையில் அனுயா வெளியேற்றப்பட்டார்/.

இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனுயா தன்னுடன் கலந்து கொண்ட பங்கேற்பார்களுக்கு பட்டப்பெயர்களை கமல்ஹாசனிடம் தெரிவித்தார். அவர் கொடுத்த பட்டப்பெயர்களின் விபரங்கள் பின்வருமாறு:

ஜூலி – வாயாடி
ரைசா – பயந்தாங் கோழி
ஆரவ் – ஆணழகன்
பரணி – வெள்ளந்தி
கஞ்சா கருப்பு – அதிகப்பிரசங்கி
காயந்தி ரகுராம் – வில்லன்/வில்லி
நமீதா – நாட்டாமை
சினேகன் – புளுகுமூட்டை
ஸ்ரீ – நல்ல மனசுகாரர்
ஆர்த்தி – சாப்பாட்டுராமர்
கணேஷ் வெங்கட்ராமன் – பச்சோந்தி

ஓவியா, சக்தி, வையாபுரி ஆகிய மூவருக்கும் அனுயா எந்த பட்டங்களும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply