ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவின் பெற்றோர் எதிர்ப்பு.

rajini and anushka

 

கோச்சடையான் ரிலீஸ் தேதியே இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் ரஜினியின் அடுத்த படத்திற்கு பூஜை போடும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இந்த புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இதை சோனாக்ஷியின் தந்தை சத்ருஹன்சின்ஹா உறுதி செய்துள்ளார்.

தென்னிந்திய படத்தில் அதுவும் ரஜினிக்கு ஜோடியாக தனது மகள் நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ள சத்ருஹன் சின்ஹா, ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சோனாக்ஷி சின்ஹா தற்போது பாலிவுட் படமான Tevar என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ரஜினியின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ஜூலை மாதம் மைசூரில் முதல்கட்ட படப்பிடிப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எஸ்.ரவிகுமார் ‘முத்து’ திரைப்படமும் மைசூரில்தான் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இன்னொரு நடிகையும் நடிக்கவிருக்கிறார். அந்த கேரக்டரில் நடிக்க அனுஷ்காவிடம் பேசப்பட்டு வருகிறது. அனுஷ்காவும் நடிக்க சம்மதித்து உள்ளார். ஆனால் அனுஷ்காவின் பெற்றோர் அனுஷ்காவிற்கு மாப்பிள்ளை பார்த்து வருவதால் நடிப்பில் இருந்து விலகிவிட வற்புறுத்தி வருகின்றனர்.

Leave a Reply