விராத் கோஹ்லிக்கு வரவேற்பு, அனுஷ்காவுக்கு தடை: பாகிஸ்தான் அதிரடி

விராத் கோஹ்லிக்கு வரவேற்பு, அனுஷ்காவுக்கு தடை: பாகிஸ்தான் அதிரடி

‘பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் உங்களை பார்க்க வேண்டும் விராத் கோலி’ என்று பாகிஸ்தான் ரசிகர்கள் விராத் கோஹ்லிக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் விராத்கோஹ்லியின் மனைவி அனுஷ்கா ஷர்மா நடித்த படம் ஒன்றுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள ‘பரி’ திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில் திரைப்படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் குர்ரான் மற்றும் இந்து மந்திரங்களை கொண்டு மாயாஜாலம் செய்வதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தை தடை செய்வதாக பாகிஸ்தான் தணிக்கை சான்றிதழ் அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்துக்கு சிந்து தணிக்கை சான்றிதழ் அமைப்பும், பஞ்சாப் தணிக்கை சான்றிதழ் அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.