ஜோதிகா கீர்த்தி சுரேசை அடுத்து அனுஷ்காவின் படம்:

வெற்றி நடைபோடும் ஓடிடி

ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள் திரைப்படம் 4 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில் அந்த படம் அமேசான் ப்ரைமில் 8 கோடிக்கு விலைபோனது

அதேபோல் கீர்த்தி சுரேஷின் பெங்குவின் படமும் மிகப்பெரிய லாபத்துடன் அமேசான் ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழ் ஆங்கிலம் இந்தி தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தயாரான திரைப்படம் நிசப்தம்

மாதவன், அனுஷ்கா,அஞ்சலி ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படமும் ஓடிடி பக்கம் செல்கிறது

அமேசான் பிரைம் இந்த படத்தை மிகப்பெரிய தொகையை கொடுத்துள்ளதாகவும் இதனால் இந்த படமும் அமேசானில் விற்கப் பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

ஆனால் ஒரு விஷயத்தை நன்றாக இதில் கவனிக்க வேண்டும் ஓடிடியில் வெளியான அனைத்து படங்களும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் என்பதும் இன்னும் பெரிய ஹீரோக்கள் படம் எதுவும் ஓடிடிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply