shadow

ajith, anushka and trishaஅஜீத், அனுஷ்கா,த்ரிஷா மற்றும் பலர் நடித்து வரும் ‘அஜீத் 55’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது.இந்த படத்தின் தொழில்நுட்ப குழு அஜீத் 55 படத்தின் டிரைலர் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிகைக்கு சமீபத்தில் பேட்டியளித்த இந்த படத்தின் இயக்குனர் கவுதம் மேனன், ‘இந்த படத்தில் வரும் அஜீத் கேரக்டரான சத்யதேவ், அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுக்கும்.; இந்த கேரக்டரை இந்த படத்துடன் முடிக்க எனக்கு மனமில்லை. எனவே இந்த படத்தின் தொடர்ச்சியை மிக விரைவில் இயக்குவேன். அஜீத் அனுமதி கொடுத்தால் அஜீத்தின் அடுத்த படமாகக்கூட இதன் தொடர்ச்சி எடுக்கப்படலாம் என்று கூறினார்.

இந்நிலையில் அஜீத்தின் தொடர்ச்சியாக அடுத்த படம் எடுக்க முடிவு செய்தால் அதில் தன்னால் நடிக்க முடியாது என அனுஷ்கா கவுதம் மேனனிடம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அஜீத் 55, லிங்கா, மற்றும் பாஹுபாலி, ருத்ரம்மா தேவி ஆகிய படங்களை முடித்துவிட்டு தான் திருமணம் செய்ய உள்ளதாகவும், எனவே மீண்டும் வேறு புதிய படங்களில் கமிட் ஆக விரும்பவில்லை என்றும் அவர் கவுதம் மேனனிடம் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதே காரணத்தை காரணம் காட்டி த்ரிஷாவும் அஜீத்தின் அடுத்த படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் தெலுங்கு மொழி இணையதளம் ஒன்று கூறியுள்ளது.

எனவே கவுதம் மேனன் அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கும் முடிவை கைவிட்டுவிட்டதாகவும், அஜீத் 55 முடிந்தவுடன் சிம்பு படத்தை இயக்கவுள்ளதாகவும் அவர் கூறிவிட்டார். இதனால் அஜீத் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply