‘ஆன்டி இண்டியன்’ ரிலீஸ் தேதியை திடீரென மாற்றிய புளூசட்டை மாறன்!

புளூசட்டை மாறன் இயக்கிய ‘ஆன்டி இண்டியன்’ என்ற திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக புளூசட்டை மாறன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

டிசம்பர் 3ஆம் தேதி நமது படமான ‘ஆன்டி இண்டியன்’ ரிலீஸ் என்று தெரிவித்து இருந்தோம். தற்போது அதில் ஒரு மாற்றம். டிசம்பர் முதல் வாரத்தில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது. 3ஆம் தேதியன்று பிரபல நடிகர்களின் படங்களும் வெளியாகிறது. ஆகவே குறிப்பிட்ட நாளில் போதுமான திரையரங்குகள் கிடைப்பது கடினம் என்பதால் ஒரு வாரம் தள்ளி பத்தாம் தேதி வருவதென முடிவு செய்துள்ளோம்.

நீண்ட நாட்கள் காத்திருந்து விட்டோம். மேலும் ஒரு வாரம் தாமதமானால் தவறு இல்லை என்பதாலும் இத்திரைப்படம் தமிழகத்தில் உள்ள போதுமான அரங்குகளில் வெளியானால் பலரையும் சென்றடையும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புளூசட்டை மாறன் தெரிவித்துள்ளார்.