சுப்பிரமணியபுரம், பசங்க, ஈசன் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதாக அவர் மீது அவரது மனைவி அதிர்ச்சி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று அடையாறு உதவி கமிஷனர் மோகன்ராஜ் அவர்களிடம் ஜேம்ஸ் வசந்தன் மனைவி சுகந்தி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: எனக்கும் ஜேம்ஸ் வசந்தனுக்கும் கடந்த 1991 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். எனது கணவர் என்னிடம் முறையான அனுமதி பெறாமல் இரண்டாவது திருமணம் செய்ததாக அறிகிறேன். சமீபத்தில் ஃபேஸ்புக்கில்  வெளியிடப்பட்ட ஒரு புகைப்படத்தின் மூலம் அவருக்கு இன்னொரு குடும்பம் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பெண் ஏற்கனவே எனது கணவருடன் நட்பு முறையில் பழகிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே என்னுடைய அனுமதியின்றி இரண்டாவது திருமணம் செய்த எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு ஜேம்ஸ் வசந்தன் பக்கத்து வீட்டு பெண் ஒருவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply