‘அண்ணத்த’ படத்தை கைப்பற்றினார் உதயநிதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘அண்ணத்த’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அல்லது திரைப்படத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிக திரையரங்குகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் தீபாவளிக்கு வரும் எனிமி உள்பட மற்ற படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.