ரஜினியின் ‘அண்ணாத்த’ திருவிழா ஆரம்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.

இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் நாளை மாலை 6 மணிக்கு ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

இதனையடுத்து ரஜினியின் ‘அண்ணாத்த’ திருவிழா ஆரம்பம் ஆகிவிட்டது என ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ரஜினிகாந்த் ஜோடியாக மீனா, குஷ்ப நடிக்க மேலும் முக்கிய கேரக்டர்களில், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்துள்ளார்.,