திமுக கட்சி உருவாக காரணமான முன்னாள் முதல்வர் அண்ணா அவர்களின் வளர்ப்பு மகன் கவுதமன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 67.

அறிஞர் அண்ணா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை-ராணி தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லாததால், அண்ணாவின் தங்கை பேரன் கவுதமனை வளர்ப்பு மகனாக வளர்த்து வந்தார். இவர் சென்னையில் உள்ள ஷெனாய் நகரில் அவரது மகள் சரிதா வீட்டில் கடந்த சில வருடங்களாக வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுதமன், நேற்று காலை காலமானார். அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு அஞ்சலி செலுத்தினர்.

இவரது இறுதிச்சடங்கு சென்னையில் இன்று மாலை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply