டாக்டர் கிருஷ்ணசாமி கைது: அண்ணாமலை கண்டனம்

டாக்டர் கிருஷ்ணசாமி கைது: அண்ணாமலை கண்டனம்

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் திரு டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

மின் கட்டண உயர்வை கண்டித்து முறையாக முன் அனுமதி பெற்று போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் திரு டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கின்றது

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் திரு டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தமிழக பாஜக சார்பாக எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினோம்

மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடும் கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் தமிழக அரசின் ஜனநாயகமற்ற போக்கு வருத்தம் அளிக்கிறது.