shadow

anjaliஆண்ட்ரியா படத்தில் சிறப்பு தோற்றத்தில் அஞ்சலி

ராம் இயக்கத்தில் வெளிவந்த ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை அஞ்சலி அந்த படத்தில் தனது யதார்த்தமான நடிப்பின்மூலம் அனைவரையும் கவர்ந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் போன்ற பல படங்களில் நடித்த அவர் பின்னர் தெலுங்கு திரையுலகம் சென்றார்.

தற்போது ஜெயம் ரவியின் ‘சகலகலாவல்லவன்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு ரீ எண்ட்ரி ஆகியுள்ள அஞ்சலி, தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ராம் இயக்கி வரும் ‘தரமணி’ படத்தில் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்துள்ளாராம்.

வசந்த் ரவி, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து, போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சில வருடங்கள் கோலிவுட் பக்கம் வராமல் இருந்த அஞ்சலி தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Reply