‘கற்புக்கரசி’ கண்ணகி கேரக்டரில் அஞ்சலி?
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறைவி’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் நாயகி அஞ்சலி நடித்த கேரக்டர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் என்ற இதிகாச கதையை கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. குறிப்பாக இந்த இதிகாசத்தில் வரும் கண்ணகி கேரக்டர் மதுரையை தீயிட்டு அழித்தது என்பது அனைவர் மனதிலும் பதிந்த ஒன்று. இந்நிலையில் ‘இறைவி’ படத்தில் நடித்திருக்கும் அஞ்சலியின் கேரக்டர் கண்ணகி கேரக்டரை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாம்.
கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், படங்கள் போலவே இந்த படமும் அஞ்சலிக்கு மறக்க முடியாத ஒரு படமாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.