shadow

விஷாலுக்காக அனிருத் பாடிய கிராமத்து குத்து பாடல்
anirudh
விஷால், ஸ்ரீதிவ்யா நடித்த ‘மருது’ திரைப்படம் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்காக ஒரு பாடலை நேற்று ஒலிப்பதிவு செய்துள்ளார் இசையமைப்பாளர் டி.இமான்.

கிராமத்து குத்து பாடலான இந்த பாடலை அனிருத் பாடினால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்த இமான், அனிருத்தை அணுகியதாகவும், அனிருத்தும் உடனே சம்மதம் தெரிவித்ததாகவும் நேற்று இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இமான் இசையில் ஏற்கனவே அனிருத், ‘நீ என்ன அப்பாடக்காரா’ மற்றும் ‘டண்டனக்கா’ ஆகிய பாடல்களை பாடியிருந்தாலும் விஷால் நடிக்கும் படத்திற்காக அனிருத் பாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

விஷாலின் ‘விஷால் பிலிம் பேக்டரி’ தயாரித்துள்ள இந்த படத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா, ராதாரவி, சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Leave a Reply