shadow

அஜித்தால் அனிருத்துக்கு ஏற்பட்ட நஷ்டம்
anirudh
அஜித் நடித்த ‘வேதாளம்’ படத்திற்கு இசையமைத்த அனிருத், அந்த படத்தின் சூப்பர் ஹிட் பாடல்களை கம்போஸ் செய்து பெரிய புகழும் வெயிட்டான சம்பளம் பெற்றாலும் அந்த படத்தால் தெலுங்கில் அறிமுகமாக இருந்த வாய்ப்பை நழுவ விட்டார். அதாவது ராமசரண் தேஜா நடித்த ‘புரூஸ்லீ’ படத்தின் வாய்ப்பை வேதாளம்’ படம் காரணமாக இழந்தார்.

அதேபோல் தற்போது அல்லிஅர்ஜூன் நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் அதே தேதியை அஜித்57 படத்திற்காக சிறுத்தை சிவா கேட்டதால் அஜித்துக்காக இந்த படத்தையும் அனிருத் இழக்க நேரிட்டுள்ளது.

தெலுங்கில் அறிமுகமானால் மிகப்பெரிய சம்பளம் பெறலாம் என்ற வாய்ப்பு இருந்தும் அஜித் படத்துக்கு இசையமைப்பதுதான் முக்கியம் என்பதில் அனிருத் உறுதியாக உள்ளார். அதுவும் அஜித்தின் அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைப்பது என்பது அரிது என்பதால் இந்த வாய்ப்பை அவர் இழக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Reply