shadow

அனிருத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் நடித்த ‘மொட்டசிவா கெட்டசிவா’ படம் வரும் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் ஒருவாரம் அதாவது பிப்ரவரி 24ஆம் தேதிக்கு தள்ளிப்போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘விஐபி’ படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த ரிஷிகேஷ் நாயகனாக நடித்த ‘ரம்’ திரைப்படம் பிப்ரவரி 17ல் ரிலீஸ் ஆகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சாய்பரத் இயக்கியுள்ளார்.

ரிஷிகேஷ், நரேன், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், விவேக் மற்றும் பலர் நடித்துள்ள இந்த திகில் படத்திற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அனிருத்தின் இசையில் ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தை திரையில் காண ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply