ஜல்லிக்கட்டு: தலைமைச்செயலாளர், டிஜிபிக்கு விலங்குகள் நல வாரியம் கடிதம்

ஜல்லிக்கட்டு: தலைமைச்செயலாளர், டிஜிபிக்கு விலங்குகள் நல வாரியம் கடிதம்

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின்போது ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் புரட்சி போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உடைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் ஜல்லிக்கட்டுக்காக காளைகளை துன்புறுத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட நெறிமுறைகளை சுற்றறிக்கையாக ஜல்லிக்கட்டு நடத்துவோருக்கு அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply