பேச்சுத் திறமை அதிகரிக்க வேண்டுமா? அங்குச முத்திரை செய்து பாருங்கள்

angusa muthiraiஅங்குச முத்திரை:

செய்முறை:

முதலில் விரிப்பின் மீது அமர வேண்டும். பின்னர் கைவிரல்களை மூடிக் கொண்டு, கட்டைவிரலை நடுவிரலின் நடு மூட்டில் படும்படி பிடிக்கவும். ஆள்காட்டிவிரலை மட்டும் கொக்கி போல் வளைத்து வைக்கவும்.

இதுவே அங்குச முத்திரை. தினமும் இந்த முத்திரையை 15 முதல் 20 நிமிடம் பயிற்சி செய்யவும். ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

யன்கள் :

நமது மனதைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தம், மனோ பயங்களை நீக்கி, வாக்கு வன்மை, பேச்சுக்கலையைத் தரவல்ல இந்த அங்குச முத்திரை. சிலருக்கு என்னதான் திறமை இருந்தாலும், அதை சரியாக எடுத்துக் கூற முடியாமல் திண்டாடுவர். அவ்வாறு உள்ளவர்கள் இம்முத்திரையை பழகுவதன் மூலம் சிறந்த பேச்சுத் திறன் மிக்கவர்களாக முடியும்.

Leave a Reply

Your email address will not be published.