[carousel ids=”35675,35676,35677,35678,35679″]
பிரேசில் நாட்டில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் நேற்று நடந்த விறுவிறுப்பான போட்டி ஒன்றில் ஜெர்மனி மிக அபாரமாக விளையாடி போர்ச்சுக்கல் அணியை 4-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியை நேரில் கண்டு ரசித்த ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கில் ஒவ்வொரு முறை ஜெர்மனி வீரர்கள் கோல் போடும்போது துள்ளி குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஜெர்மனியின் பெண் அதிபர் ஏஞ்சலா மெர்க்கில் நேற்று நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நேரில் கண்டு ரசித்தார். போர்ச்சுக்கள் அணிக்கு எதிராக மிக ஆக்ரோஷமாக விளையாடி ஜெர்மனி வீரர்கள் அடுத்தடுத்து நான்கு போல்கள் போட்டு அசத்தினர். ஜெர்மனி வீரர்களுக்கு எதிராக ஒரு கோல் கூட போர்ச்சுக்கல் வீரர்களால் போட முடியவில்லை.
ஒவ்வொரு முறை ஜெர்மனி வீரர்கள் கோல்போடும்போது சிறுகுழந்தைபோல 59 வயது ஜெர்மனி அதிபர் துள்ளிக்குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆட்டம் முடிந்த பின்னர் ஏஞ்சலா மெர்க்கில், வீரர்களின் டிரஸ்ஸிங் அறைக்கு சென்று அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து கூறினார். அதிபரை சிறிதும் எதிர்பார்க்காத ஜெர்மனி வீரர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.