shadow

விஜயவாடாவில் புதிய சட்டசபை கட்டிடம். ஆந்திர சட்டசபை கட்டிடம் தெலுங்கானாவிடம் ஒப்படைப்பு

andhraஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், ஆந்திரா, தெலுங்கானா என பிரிந்துவிட்ட நிலையில் இரு மாநில அரசுகளும் ஐதராபாத்தில் உள்ள சட்டசபை கட்டிடத்தை பயன்படுத்தி வந்தன.

இந்நிலையில் தற்போது விஜயவாடாவில் ஆந்திராவுக்கு என புதிய சட்டசபை மற்றும் தலைமைச்செயல கட்டிடம் கட்டி முடித்தாகிவிட்டது. வரும் குளிர்கால கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஆந்திரசட்டசபை கட்டிடத்தை முறைப்படி தெலுங்கானாவிடம் கொடுக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தை கூட்டி கருத்து கேட்ட ஆந்திர முதல்வர் விரைவில் சட்டசபை கட்டிடத்தை தெலுங்கானாவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் முடிவு செய்து உள்ளதாக தெலுங்கானா வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply