ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா என்னும் புதிய மாநிலத்தை உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர அரசு ஊழியர்கள் வரும் 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் ஆந்திர அரசு ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளது.

நாளை தொடங்கவுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதா நிறைவேற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனது அமைச்சர்களுடன் நாளை டெல்லி சென்று குடியரசு தலைவரை சந்திக்க உள்ளார்.

இந்நிலையில் ஆந்திர மாநில அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட அதிரடியாக முடிவெடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தின் விளைவாக அரசுப்பணிகள் முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply