shadow

ஆந்திராவில் தற்போது 13 மாவட்டங்கள் உள்ள நிலையில் இந்த மாவட்டங்கள் இன்று முதல் 26 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது என ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக சித்தூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு சித்தூர் மாவட்டம், திருப்பதி மாவட்டம் என பிரிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியை தலைமையிடமாகக் கொண்ட மாவட்டத்திற்கு பாலாஜி மாவட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் கால்வதுறை கண்காணிப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.