ஆந்திராவில் போராட்டம் வாபஸ் ஆனதால், வேலூரில் இருந்து பஸ் போக்குவரத்து துவங்கியது. ஒருங்கிணைந்த மாநிலம் கேட்டு ஆந்திரா மாநிலத்தில், கடந்த, 72 நாட்கள் நடந்து வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் முதல்வர் கிரண்குமாரிடம் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின் நேற்று முடிவுக்கு வந்தது.போராட்டத்தை விலக்கிக் கொள்ளவதாக தெரிவித்தனர். இதையடுத்து போக்குவரத்து துவங்கியது. நேற்று காலை,11 மணிக்கு வேலூரில் இருந்து சித்தூர், திருப்பதி, பலமனேர், காளஸ்திரிக்கு ஆந்திரா, தமிழக அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் இயக்கத் துவங்கியது. இதனால், திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.